உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது. உலகளவில் கல்லீரல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பேர் மரணமடைகின்றனர்.