ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ‘பாபாங்குச ஏகாதசி’ என்று பெயர். பாவங்களை அங்குசம் போல் அகற்றும் என்பதால் இந்த பெயர் பெற்றது. இந்த தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் நீங்கும். இன்று விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு விரதப் பலனாக 108 திவ்ய தேசங்களில் வழிபட்ட புண்ணியமும், முன்னோர்களின் ஆசியும் கிட்டும். பெருமாளுக்கு பிடித்த நெய்வேத்யங்கள் படைத்து, விரதமிருந்து இறைவனின் அருளைப் பெறுங்கள்.