நாடு முழுவதும் 4.30 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,500 கோடி சுழல் நிதியை பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார். 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.5,000 கோடி வங்கிக் கடனுதவியையும் வழங்கவுள்ளார். சுழல்நிதி என்பது சுய உதவி குழுக்களின் தொகுப்பு நிதியை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை, கடன் மேலாண்மைத் திறன்களை மேம்படுத்தவும் (அரசு ரூ.10,000 + வங்கிகள் ரூ.50,000) வழங்கப்படும் தொகையாகும்.