மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு கிராமத்தில் உள்ள தனியார் வெடி உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட வடிவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். இது குறித்தான அவரது அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.