நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

539பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு அருகே விழுப்புரம் முதல் வேலூர் சாலையில் கெங்கை சூடாமணி கிராமம் அருகே வேலூரில் இருந்து பாண்டி நோக்கி வந்த தனியார் பேருந்து சேத்துப்பட்டு தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்த முருகன் டைலர் இவருடைய மகள் அனுஷ்கா வயது 16 எலக்ட்ரிக் பைக்கில் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் பைக் மீது மோதியதில் சிறுமி அனுஷ்கா கால் மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து அப்பகுதி மக்கள் அச்சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்த போளூர் காவல்துணை கண்காணிப்பாளர் நல்லு மற்றும் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி