வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அஞ்சலி

84பார்த்தது
வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் அஞ்சலி
வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 1987 செப். 17-ம் தேதி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 21 தியாகிகள் உயிர் நீத்தனர்.

இதையொட்டி ஆண்டுதோறும் செப். 17-ம் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் நினைவு தினமாக வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று(செப்.17) மாலை நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி