திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர் பகுதிக்கு உட்பட்ட பைரவபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மகா கால பைரவர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.