திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதில், பாரதிய ஜனதா கட்சியின் பட்ஜெட் விளக்க கூட்டமும், வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டமும் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கவிதா பிரதீஷ் துவக்கவுரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொது செயலாளர் M. கருப்பு முருகானந்தம் , மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த கூட்டத்தில் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட பார்வையாளர் தசரதன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.