திருவண்ணாமலை: புத்தாக்க வளர் மையம் அமைக்க உரிமை

61பார்த்தது
திருவண்ணாமலை: புத்தாக்க வளர் மையம் அமைக்க உரிமை
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி கடந்த 32 ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறது மேலும் இதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசின் புத்தாக்க வளர் மையம் என்ற மையம் அமைத்திட உரிமை வழங்கி உள்ளது. இந்த புத்தாக்க வளர் மையம் என்பது ஒரு புதிய தொழில் நிறுவனத்திற்கு தேவையான அனைத்து சேவைகளையும் அளித்திட இயங்கி வரும் அமைப்பாகும். இம்மையம் அமைப்பதற்கான உரிமை சான்றிதழ் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க அருணை பொறியியல் கல்லூரி துணைத் தலைவர் எ. வ. குமரன் ஆலோசனைப்படி அருணை பொறியியல் கல்லூரியின் பதிவாளர் ஆர். சத்தியசீலன் பெற்றுக் கொண்டார். ஆர். பிரவீன் குமார் உடன் இருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி