ரைஸ் மில்களில் வருமான வரித்துறையினர் சோதனை

1893பார்த்தது
ரைஸ் மில்களில் வருமான வரித்துறையினர் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட மார்டன் ரைஸ் மில்களில் சென்னை மற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த வருமான வரித்துறை இணை இயக்குனர் தலைமையில் 24க்கும் மேற்பட்ட குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மதியம் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும், அந்த 5 ரைஸ் மில்களில் சோதனை தொடர்ந்து நடத்தி வந்தனர். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை குழுவினர் ரைஸ்மில்களில் இருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து சோதனையை நடத்தினர். இந்த ரைஸ் மில்களில் சுமார் 8 மணி நேரம் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்து 5க்கும் மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்து வாகனங்களில் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி