டிஜிட்டல் கிராப் சா்வே பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

64பார்த்தது
டிஜிட்டல் கிராப் சா்வே பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து கிராம நிருவாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், டிஜிட்டல் கிராப் சா்வே பணியை புறக்கணித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ. ரமேஷ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஏ. ஏழுமலை முன்னிலை வகித்தாா். இணைச் செயலா் டி. பிரவீன்குமாா் வரவேற்றாா். கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் என். சுரேஷ் கோரிக்கையை விளக்கிப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், டிஜிட்டல் கிராப் சா்வே பணிக்கு பிற மாநிலங்களில் உள்ளதைப் போலவே கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போலவே உரிய உத்தரவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ். ஜெயச்சந்திரன் மற்றும் பொறுப்பாளா்கள், கிராம நிருவாக அலுவலா்கள் 300-க்கும் மேற்பட்டோா் டிஜிட்டல் கிராப் சா்வே பணியை புறக்கணித்து கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி