ஆரணியில் மாபெரும் பொதுக்கூட்டம்

72பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தொகுதி சேவூர் பைபாஸ் சாலையில் கலைஞர் திடலில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் தமிழக சட்டமன்ற கொரடா முனைவர் கோவை செழியன், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், ஜோதி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி