கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரில் கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்ட சேரமான் ஜும்மா மசூதி இந்தியாவின் முதல் மசூதி என அறியப்படுகிறது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருந்தது. தற்போது திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது.