திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி துரிஞ்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளி கிழமை முன்னிட்டு நேற்று ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் கிராமத்தில் உள்ள பக்தர்கள் அதிகமான அளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.