திருப்பூர் மாவட்டம் உடுமலை தெற்கு ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சி ஜல்லிபட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு கழக தலைமை நிலைய செயலாளர் S. P. வேலுமணி ஆலோசனையின் பேரில் உடுமலை தெற்கு ஒன்றிய அவைதலைவர் ஜி. கே. (எ)வி. சுந்தர்ராஜன் ஏற்பாட்டில் ஜல்லிபட்டி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மகளிருக்கு சேலை மற்றும் ஆண்களுக்கு வேட்டி இனிப்பு 577 பேருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் தளிபேரூராட்சி தலைவர் தளிகுமரவேல், முன்னாள் மாவட்ட ஆவின் இயக்குனர் மதியழகன், முன்னாள் அமராவதி சர்க்கரை ஆலை இயக்குநர் பள்ளபாளையம் குப்புசாமி, கிளை கழக செயலாளர்கள் தினைக்குளம் கருப்புசாமி, ஏடி காலனி கருப்புசாமி, புதுகாலனி குப்புசாமி, சிவாஜி தண்டபானி டெய்லர் கருப்புசாமி, ராமசாமி கவுண்டர், செகமலை கவுண்டர், சுப்புலு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.