உடுமலை: நியாய விலை கடை இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்!

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் சின்னவீரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடை உள்ளது. இதன் மூலமாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது கடைக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக தெரிகிறது. இதில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து குடிமை பொருள் நிர்வாகத்தின் சார்பில் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பொருட்களை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்துடன் மூத்த குடிமக்களும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத் தொடர்ந்து கடையை மீண்டும் அதே இடத்தில் செயல்படுத்தக் கோரி நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த குடிமை பொருள் வட்டாட்சியர் ஜலஜா மற்றும் உடுமலை காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது பேச்சுவார்த்தையில் நியாயவிலைக் கடை இடமாற்றம் செய்யப்படாது
என தெரிவித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி