திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் காய்கறி உற்பத்தியில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை முறைக்கு அதிக வரவேற்பு உள்ளது. தேங்காய் மற்றும் காய்கறிகள், தானியங்கள் உட்பட உற்பத்திக்கான சாகுபடியில் ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளை விவசாயிகள் தவிர்க்க துவங்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறையினர் இயற்கை வேளாண்மை இடுபொருட்களை மானியத்தில் வழங்கினால் நஞ்சில்லா உணவு உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.