உடுமலையில் பாஜக நிர்வாகிகள் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்று இருந்தபோது இந்திய தேர்தல் நடைமுறை குறித்து பேசியிருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த தர்விந்தர் சிங் மர்வா, சிவசேனா(ஷிண்டே பிரிவு) கட்சித் தலைவர் சஞ்சய் கெய்க்வாட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ரவ்னீத்பிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த எச். ராஜா ஆகியோர் ராகுல் காந்தியை தவறுதலாக சித்தரித்து பேசி இருந்ததை கண்டித்து உடுமலை நகர காங்கிரஸ் சார்பில் நடவடிக்கை எடுக்கும் படி உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கலவரத்தை தூண்டிவிடும் நோக்கத்திலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்திலும் பேசி உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வின் போது மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், கிட்டுசாமி, உடுமலை நகர மன்ற 4-வது வார்டு உறுப்பினர் கலைவாணி, எஸ். முருகன், வக்கீல் வெற்றிவேல் குமார், பொன் பலராமன் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி