பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு

76பார்த்தது
பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்கத்தையும் தரக்குறைவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு
கடலூர் மாவட்டம் புவனகிரியில் கடந்த 4ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியையும் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி அவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பேசி உள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சமூகத்தினர் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி கலவரத்திற்கு வித்திட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாநகரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன் , பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லட்சுமியை நேரில் சந்தித்து புகார் மனுவினை அளித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி