எஸ் டி பி ஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், மாநில அளவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டும், வரப்போகும் தேர்தலுக்கான பணிகள் குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகால செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், மாநில, தேசிய அரசியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், 25 தீர்மானங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக அரசு சட்டரீதியாக கடந்த மூன்று ஆண்டு கலமாக நடவடிக்கை எடுக்கவில்லை, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நீட் தேர்வு ரத்துக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக உடனடியாக மாநில கல்விக் கொள்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, தமிழகம் முழுவதும் போதை வஸ்துக்கள் அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை மட்டுமே வெளியிடுகிறார் தவிர களத்தில் ஆய்வு செய்வதில்லை, என்றும் வரும் 2026 தேர்தலில் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று பேசினார்.