கார்கில் போர் வெற்றியின் 25-வது ஆண்டு விழா நிப்ட்- டீ கல்லூரியில் கொண்டாடப்பட் டது.
வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில் மாணவர்கள் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். பின்னர் நாட்டு நலப்பணித் திட் டம் மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் சிட்கோ, முதலிபாளையத் தில் பேரணி நடத்தினர். விழாவில் கல்லூரி முதல்வர் கே. பி. பாலகிருஷ்ணன், அப்பேரல் புரொடக்சன் மெர்ச்சண்டைசிங் துறைத்தலை வர் பி. பி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். நாட்டு நல பணி திட்ட அதிகாரி வணிகவியல் துறை ராஜசேகரன், தேசிய மாணவர் படை அதிகாரி டி. பிர தீப்குமார் மாணவர்களை வழிநடத்தி சென்ற னர். இந்திய கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில் பேரணி முடிந்து மாணவர்கள் ஊர் பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கி மகிழ்ந்தனர்.