இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க்கா வெற்றி பெற்றது. இதில், சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆனார். இதன்மூலம் அவர் மோசமாக சாதனையை படைத்துள்ளார். இந்த வருடம் மட்டும் 4 முறை டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக முறை டக் ஆகிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.