திருப்பூர்-தாராபுரம் சாலை ஜம்மனை ஓடை பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் நேற்று திருப்பூர் மங்கலம் சாலை தாடிக்கார முக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் கிணற்றின் அருகே நின்று வேலை பார்த்துக் கொண்டி ருந்தபோது தவறி கிணற்றில் விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் திருப்பூர் மத்திய போலீசாருக்கும், திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரி வித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப் புத்துறையினர் கிணற்றில் பலத்த காயங்களு டன் இறந்து கிடந்த முதியவரை மீட்டனர். பின்பு மத்திய போலீசார் விசாரணை மேற் கொண்டு உடலை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.