மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன்

80பார்த்தது
மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவன்
கரூரை சேர்ந்தவர் நிஜாமுதீன் என்கிற பாரதிதாசன் (வயது 32). கட்டிடத்தொழிலாளி. இவர் கட்டிட வேலைக்காக ஈரோட்டில் பணிபுரிந்தபோது ஈரோட்டை சேர்ந்த நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் மதம் மாறி பாரதிதாசன் என்ற பெயரை நிஜாமுதீன் என வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கோபித்துக்கொண்ட நிஷா தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பாரதிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். தனது மனைவி பல்லடத்தில் இருப்பதை அறிந்த நிஜாமுதீன் நேற்று கரூரில் இருந்து பல்லடம் வந்துள்ளார். நிஷாவின் பாட்டி வீட்டிற்குச் வந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு நிஷாவை அழைத்துள்ளார். அதற்கு நிஷா மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து நிஷாவின் தலையில் வெட்டியுள்ளார். அக்கம், பக்கம் உள்ளவர்கள் நிஷாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம் னைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நிஜாமுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.