திருப்பூர் மாவட்டம் உடுமலை-பழனி சாலையில் உள்ள மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிலையில் போது இடவசதி இல்லாமல் பல்வேறு துறைகள் ஒரே கட்டடத்தில் இயங்கி வந்தன. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அலுவலகம் கட்ட ரூ. 5. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் 18ம் தேதி பணி உத்தரவு வழங்கப்படும் நவம்பர் 20ஆம் தேதிக்கு முன்பாக கட்டுமான பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.