சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மண் விளக்கு வைத்து பூஜை

51பார்த்தது
சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு  மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்தரட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இளநீர் வைத்தபோது தேங்காய், தேங்காய் பருப்பு விலை கூடியது குறிப்பிடதக்கதாகும். இது போல வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 26 ம் தேதி முதல் புடவை  வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டம்  சின்னாண்ட கோயில் பகுதியைச் சேர்ந்த தனிகைநாதன்(33) என்ற பக்தரின் கனவில் மண்விளக்கு வைக்க உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மண்விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி