காங்கேயம் மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை

564பார்த்தது
காங்கேயம், பாப்பினி ஊராட்சி முத்தூர் சாலையில் மின்கம்பங்கள் அமைப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் சாலையிலுள்ள உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி உள்ளனர்.   இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் காங்கேயம் மின்வாரியம் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாப்பினி ஊராட்சியில் அமைக்கப்படும் இந்த மின்கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் அப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இருந்தாலும், உரிய முறைகளின் படியும், பொது மக்களின் நலனுக்காகவும் அமைக்கப்படும் இது போன்ற புதிய மின்கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் விவசாய வளர்ச்சிக்கு எதிராகவும், இயற்கை வளங்களை அளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளதாகவும், 15 முதல் 20 வருடங்கள் பழமையான மரங்களை வெட்டியோ, கிளைகளை வெட்டியோ மின் கம்பங்கள் அமைக்கப்பட அவசியமில்லை‌. எனவே இயற்கையை அழிக்காமல் மின்கம்பங்கள் அமைக்கப்பட வேண்டும், மரக்கிளைகளுக்கு இடையே மரங்கள் நடப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ‌ கூடிய விரைவில் வானுயரம் வளர்ந்து நிற்கும் மரங்களை வெட்டுவதற்காகவே இது போன்ற கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது போன்ற புதிய மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுவதற்கு முன்பு இயற்கை ஆதாரங்களையும் மரம் செடி கொடிகளை அகற்றாமல் மாற்று வழியை கையாளுவது மேலும் மனித வாழ்விற்கு நன்மையாக அமையும் என காங்கேயம் மின்வாரிய அலுவலகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி