முத்தூர் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்புறம் திருவள்ளுவர் நகர் பிரிவு எதிரில் தார் சாலை சேதமடைந்து குழி ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் முத்தூர், சிவகிரி, கொடுமுடி, ஈரோடு செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றது. வேகமாக வரும் வாகனங்கள் இந்த குழியில் இறங்கி சேதம் அடைந்து வருகின்றது. இரவு நேரங்களில் எதில் வரும் வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தில் குழியிருப்பது தெரிவது இல்லை.
தங்களுடைய வாகனங்களை திடீரென்று நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் செல்லும் பலர் குழியில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.