வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூரை அடுத்த வேலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னாபுரத்தில் ரோட்டிற்கு தென்புறம் மூன்று ஏக்கர் கீழ் பவானி பாசன (LBP) நிலத்தை வீட்டு மனை பிரிவாக மாற்ற அரசு அங்கீகாரத்திற்காக அந்த நிலத்தை வாங்கிய உரிமையாளர்கள் மெயின் ரோட்டிற்கும் - அந்த நிலத்திற்கும் இடையில் LBP பாசன கொப்பு வாய்க்கால் மேற்கிலிருந்து கிழக்காக சுமார் 150 ஏக்கர் பாசனம் பெறுகிறது. பொன்னாபுரம் மற்றும் ஊடையம் இரண்டு ஊர் மக்கள் குடிநீர் ஆதாரமாக வாய்க்கால் மூலம் செல்லும் தண்ணீரை இந்த வீட்டுமனை விற்பனை உரிமையாளர்கள் (சைட்) நிலம் இருக்கும் இடத்தில் அனுமதியின்றி நீர் வளத்துறைக்கு தெரியாமல் பாலம் அமைத்து பாசன நீரை தடுப்பதோடு இல்லாமல் அந்த நிலத்தில் இருந்து வெளியே வரும் பொழுது பாலம் 6 அடி உயரத்தில் இருந்து கீழே ரோட்டிற்கு நேரடியாக இறங்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த இடம் குறுகலான வளைவு ரோடுடாக உள்ளது L-14-பாசனக் கோட்டம் - 10-எண் மதகு பாசன விவசாயிகள் - மற்றும் பொன்னாபுரம் - ஊடையம் குடிநீர் பயன்படுத்தும் பொதுமக்கள் சார்பாகவும் - விதிமுறைகளை மீறி கட்டப்படும் வீட்டுமனைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க தடை விதிக்க நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.