தாராபுரத்தில் பேருந்து மேம்பாலம் சீரமைக்கும் பணி!

59பார்த்தது
தாராபுரத்தில் பேருந்து மேம்பாலம் சீரமைக்கும் பணி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் முதல் பொள்ளாச்சி ரோடு வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நான்கு வழி சாலை திட்டத்தின் கீழ் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரியாமல் இருந்தது இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர் இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மேம்பாலத்தில் உள்ள தெருவிளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர் அதன் பிறகு சாலைகளுக்கு வர்ணம் பூசுதல் பணியும் நடைபெற்றது இதனால் சிறிது நேரம் மேம்பாலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் மேம்பாலத்தில் ஏற முடியாமல் கீழ்நோக்கி வாகனங்கள் சென்றன இதனால் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி