குன்னத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. குன்னத் தூரில் இருந்து செங்கப்பள்ளி வழியாக ஊத்துக்குளி செல் லும் சாலையின் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குன்னத்தூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் பிரதான சாலையின் நடுவே விபத்து ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக அமைந்துள்ள அத்திக்கடவு அவினாசி திட்ட குழாயின் ஏர் வால்வை உயிரிழப்பு ஏற்படும் முன் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தின் மூல மும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிக்கு பலமுறை தெரிவித் தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இர வில் இச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்க ளுக்கு எதிரே வாகனம் வரும்போது அதன் வெளிச்சத்தில் சாலை நடுவே இந்த குடிநீர் குழாய் அமைந்திருப்பது தெரியா மல் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சம்பந் தப்பட்ட அதிகாரிகள் விரைவாக இதனை மாற்றி சாலையோ ரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.