ஆதிமாசாணி அம்மன் கோயில் தை அமாவாசை திருவிழா

50பார்த்தது
ஆதிமாசாணி அம்மன் கோயில் தை அமாவாசை திருவிழா
மதுரை: சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆதிமாசாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. 7ஆம் ஆண்டு தை அமாவாசை திருவிழா நேற்று முன்தினம் இரவு மயான பூஜையுடன் தொடங்கியது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாசாணி அம்மனின் அருள்வாக்கு பெற்றனர். நேற்று காலை கோயிலில் இருந்து வைகை ஆற்றுக்கு சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்.

தொடர்புடைய செய்தி