மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

75பார்த்தது
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அவினாசி தாலூகா பழங்கரை ஊராட்சி வேலூரில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு செல்வ விநாயகர், பாலமுருகன் மற்றும் மாகாளியம்மனுக்கு புதி தாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக 10-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னி ஆண்டவர் கோவிலில் இருந்து பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர். 12-ந் தேதி காலை 5. 45 மணிக்கு மேல் 6. 40 மணிக்குள் செல்வ விநாயகர், பாலமுருகன், மாகாளியம்மன் ஆகிய தெய் வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோபுரத்தின் மேலிருந்து பக்தர்கள் மீது தீர்த் தம் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. விழாவில் கே. எம். நிட்வேர் தொழில் அதிபர் எஸ். ஆர். வி. பாலுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அழகு வள்ளி கும்மியாட்டம், பெருஞ்ச லங்கையாட்டம், பெரியநாச்சி அம்மன் வள்ளி கும்மியாட்டம் ஆகியவை நடந்தது. அன்று காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அவினாசி, திருப்பூர், பழங்கரை, தேவம்பாளையம், அவினாசிலிங் கம் பாளையம் நல்லி கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரி சனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி