அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

72பார்த்தது
அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ஊத்துக்குளி வட்டார அளவிலான தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊத்துக்குளி ரெயில் நிலையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊட்டச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி வட்டார குழந்தை வளர்ச் சித் திட்ட அலுவலர் சூர்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவ ணன், செங்கப்பள்ளி ரோட்டரிசங்க பொருளாளரும் ஊத்துக் குளி அறிவு திருக்கோவில் பேராசிரியருமான பிரபு, ஊட்டச் சத்து மேம்படுத்த சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் அக்குழந் தைகளுக்கு ரோட்டரி கிளப் செங்கப்பள்ளி மற்றும் பொது மக் கள் பங்களிப்புடன் ஊட்டச்சத்து பெட்டகமும், வேர்கள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பேபிசெல்வம், வட்டார ஒருங்கிணைப்பா ளர் கவிதா ஒருங்கிணைத்து வழங்கினார்கள். இதில் அங்கன் வாடி பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பாரதிதாசன், செங்கப்பள்ளி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அப்புசாமி, துரைசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி