திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குருமன்ஸ் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்ககோரி அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை ஆட்சியர் நிராகரித்த நிலையில் ஆவணங்கள் அடிப்படையில் முடிவெடுக்க நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதனை ஆட்சியர் நிறைவேற்றாமல் இருந்ததால் அவர் மீது நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்சியர் ஆகஸ்ட் 22ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.