திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் பாளையத்தை சேர்ந்த ஆர்த்தி. இவர் நேற்று முன்தினம் இரவு இவரது டூவிலரை வீட்டின் முன் இரவு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். அதனை தொடர்ந்து நேற்று காலை எழுந்து பார்த்த போது டூவிலர் மாயமாகி இருந்தது. பின்னர் இது குறித்து அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.