துறையூர் அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 72). இவர் தனது நண்பரான கதிரேசன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சொரத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மாபட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த ஜேசிபி வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் காயமடைந்த இருவரும் துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி வாகன ஓட்டுனரான கீழப்குன்னுபட்டியை சேர்ந்த நடேசன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.