மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்

52பார்த்தது
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் அளவு அதிகமாக உள்ளதால் பொதுமக்கள்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது கத்திரி வெயிலும் தொடங்கி உள்ளதால் சிரமத்தை போக்கும் வகையில் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் ஆங்காங்கே பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருவெறும்பூர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் மத நல்லிணக்க கோடைகால நீர் மோர் பந்தலை மூன்று மதங்களைச் சேர்ந்த லலிதாம்பிகை கோயில் ஐயர் சந்தோஷ் குருக்கள், அற்புத குழந்தையை இயேசு திருத்தலத்தைச் சார்ந்த பாதர் அந்தோணி சுந்தர பாண்டியன், நூருல் ஜும்ஆ பள்ளிவாசல் ஹஜி ஷரீப் ஆகிய மும்மதத்தைச் சார்ந்தோர்கள் இணைந்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கினர். பின்னர் பேசிய மூவரும் மதம் கடந்து மனிதன் மனிதநேயத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எல்லா மதங்களும் வலியுறுத்துவதாகவும் இது போன்ற நிகழ்வுகளால் நாம் மதம் கடந்து மனிதநேயத்தை வளர்ப்பதற்கு தொடக்கமாக உள்ளதாகவும் தெரிவித்து தொடர்ந்து இது போன்ற கூட்டு பொது சேவைகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனை ஏற்பாடு செய்த யோகானந்தம் மற்றும் பாலாஜி நகர்நல சங்கம் ஆகியோருக்கு பொதுமக்கள்வாழ்த்துக்களையும்பாராட்டுகளையும்தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி