திருச்சி விமான நிலையத்துக்கு கூடுதல் நகரப் பேருந்துகள் சேவை

60பார்த்தது
திருச்சி விமான நிலையத்துக்கு கூடுதல் நகரப் பேருந்துகள் சேவை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம், கடந்த ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டபோதே, பழைய முனையத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், குறிப்பாக திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள விமானநிலையப் பேருந்து நிறுத்தப் பகுதியிலிருந்து விமான நிலையத்துக்குள் செல்வதற்கு 2 கி.மீ.க்கு மேல் உள்ளதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து அமைச்சா் கே.என். நேரு உறுதியளித்தபடி கடந்த மாதம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் புதிய விமான முனையத்துக்கு பேருந்துச் சேவை தொடங்கியது. இந்நிலையில் இச்சேவையின் நிறை, குறைகள் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், விமான நிலையத்துக்கான பேருந்துச் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு நாளொன்றுக்கு 6 நடைகளாக அளிக்கப்பட்ட சேவையானது தற்போது, கூடுதலாக 16 நடைகள் சோ்க்கப்பட்டு 22 நடைகள் என்ற வகையில் இயக்கப்படுகிறது.

மேலும், புதிய 16 நடைகளும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பேருந்து நிலையத்துக்கு சென்று வரும் வகையில் இயக்கப்படுகிறது. இதில் 4 நடைகள் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தில்லைநகா், நீதிமன்றம் வழியாகச் சென்று வரும் வகையிலும் இயக்கப்படுகிறது. இரவு நேரத்திலும் விமான நிலையத்திலிருந்து மத்தியப் பேருந்து நிலையத்துக்கான சேவை உள்ளது.

தொடர்புடைய செய்தி