நாளை தண்டலைபுத்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

55பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தண்டலைபுத்தூர் ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பங்கேற்க உள்ளார். காலை 9 மணிக்கு துவங்கி அடுத்த நாள் காலை 9 மணி வரை அங்கு தங்கி பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். இந்தப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை முசிறி கோட்டாட்சியர் ராஜன், வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் மற்றும் ஆணையர்கள் செய்து வருகின்றனர். இந்த முகாமில் நியாய விலை கடைகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் நடைபெறும் பணிகள், மாணவர், மாணவியர் விடுதிகள், அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம் , கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நூலகம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கிறார். அவருடன் அனைத்து துறை அரசு அலுவலர்களும்ஆய்வு செய்ய உள்ளனர். மதியம் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டமும் நடைபெற உள்ளது பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார். அடுத்த நாள் முசிறியில் காலை குடிநீர் வினியோகம், பேருந்து நிலையம், உழவர் சந்தை , அரசு மருத்துவமனை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகிய பணிகளையும் ஆய்வு செய்கிறார். இந்தப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் ஆணையர்கள் ஆய்வு செய்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி