முசிறியில் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

3249பார்த்தது
முசிறிக்கு அதிமுக நகர அலுவலகத்திற்கு வருகை புரிந்த வேட்பாளர் சந்திரமோகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் முசிறி அதிமுக நகர அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, நகர செயலாளர் எம்.கே. சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் எம்.கே. ராஜமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ செல்வராசு, மல்லிகா சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்த், தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் துண்டு அணிவித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி வேட்பாளர் சந்திரமோகன் கேட்டுக்கொண்டார். மேலும் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் முன்னாள் அமைச்சர் சிவபதி முன்னிலையில் 28ஆம் தேதி நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி