திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பெண்கள் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடி நிவாரணத் தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து முசிறி கோட்டாட்சியர் ஆர்.முத்துதேவசேனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முசிறி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.