திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா பறிமுதல்

59பார்த்தது
திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா பறிமுதல்
திருச்சி மாவட்டம் ராஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் சபரி அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதை அடுத்து ராம்ஜி நகர் சப் இன்ஸ்பெக்டர் கதிர்வன் தலைமையிலான போலீசார் அக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி