மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

553பார்த்தது
ஆ. சுகுமாரன்
செய்தியாளர் முசிறி செல் 99 40 78 75 99 தேதி 18. 4 2024

முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு தேவையான
பொருட்கள் அனுப்பி
வைக்கப்பட்டது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய முசிறி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்களும்,
22 இதர வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 37 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் முசிறி சட்டமன்றத் தொகுதியில் 260 வாக்கைச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர். 260 வாக்குச்சாவடிகள் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கான தடுப்புகள் தேவையான உபகரணங்கள் வாகனங்கள் மூலம் முசிறி கோட்டாட்சியர் ராஜன், டி எஸ் பி யாஸ்மின், வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் முன்னிலையில் அனைத்து மண்டலங்களுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. முசிறி சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு பணியில் சுமார் 2000 பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி