அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி

70பார்த்தது
2023ம் ஆண்டு முடிவடைந்து 2024ம் ஆண்டு தொடங்கியது. ஆங்கில புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியுடன் புத்தாண்டினை வரவேற்றனர். புத்தாண்டினை முன்னிட்டு சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அற்புத குழந்தை இயேசு திருத்தளத்தில் குடந்தை மறை மாவட்ட ஆயர் முனைவர் ஆரோக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலியும், உலக மக்கள் நன்மை கருதி கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மனம் உருகி இறைவனை ஜெபித்தனர். தொடர்ந்து புத்தாண்டு பாடல்கள் பாடப்பட்டது. முன்னதாக கடந்த ஆண்டிற்கு நன்றி தெரிவிக்கும் திருப்பலிகள் நடைபெற்றது. அனைத்து வளங்களும், நலன்களும் கொழிக்க புதிதாக பிறந்துள்ள புத்தாண்டினை அனைத்து தரப்பு மக்களும் சந்தோஷமாக வரவேற்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பொதுமக்கள் அமைதியுடனும், சந்தோஷத்துடனும் புத்தாண்டினை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி