நம்பர்1 டோல்கேட் கடைவீதியில் மது பிரியர்களின் அட்டகாசம்

1046பார்த்தது
திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படும் இடமாக உள்ளது. திருச்சி மாநகருக்கு செல்லவும், லால்குடி, அரியலூர், முசிறி, உள்ளிட்ட பகுதிகளில் இணைப்பு பகுதியாக உள்ளது. தினமும் இருசக்கர வாகனம், பள்ளி வாகனம், பேருந்துகள் என 1000 கணக்கான வாகனங்கள், இவ்வழியாக பயணிகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகனத்திற்கு காத்திருக்கும் பேருந்து நிலையம் அருகே மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மேலும் கடை வீதியில் மதுக்கடை இருப்பதால் மது பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்திவிட்டு மது போதையில் அங்கையே படுத்து விடுகிறார்கள். மேலும் மது போதையில் அரை குறை ஆடையுடன் விழுந்து கிடப்பதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கடைவீதியில் இருக்கும் மதுக்கடை காரணமாக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி