இரசாயன நாப்கின் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

68பார்த்தது
இரசாயன நாப்கின் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
முசிறி எம். ஐ. டி வேளாண்மை மற்றும் பொறியியல் கல்லூரியில் "இரசாயன நாப்கின்கள்" பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்.

திருச்சி மாவட்டம் முசிறி எம். ஐ. டி வேளாண்மை மற்றும் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ரசாயன நாப்கின்களால் ஏற்படும் தீமைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் நடத்தப்பட்டது. கல்லூரியின் துணைச் சேர்மன் பிரவீன் குமாரின் வழிகாட்டுதலின் படி கல்லூரியின் முதல்வர் ரகுச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெமி ஹெல்த் கேர் நிறுவனத்தைச் சார்ந்த பயிற்றுநர் சிவகாமி கல்லூரி மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் இரசாயன நாப்கின்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும், மாற்றாக இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நாப்கின் அவசியம் பற்றியும் , அவற்றினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் சசிகலா, கற்பகம், ஹரிணி ஸ்ரீ, அபிநயா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நாட்டு நல பணி திட்டம் மாணவி அனு அனைவரையும் வரவேற்றார். இறுதியில் நாட்டு நல பணித்திட்ட மாணவி இளமதி அனைவருக்கும் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் சுதாகர், ஆனந்த் மற்றும் சோபனா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி