தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

67பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் இருவர் உள்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சிவகாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மேனகா (18), அவரது சகோதரி ஈஸ்வரி (15) மற்றும் சங்கரேஸ்வரன் (40) என்பது தெரியவந்துள்ளது. நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி