பஸ் கன்டக்டரை கத்தியால் குத்திக்கொன்ற இருவர்

583பார்த்தது
பஸ் கன்டக்டரை கத்தியால் குத்திக்கொன்ற இருவர்
சென்னையில் மாநகர போக்குவரத்து நடத்துநர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பணிமனையில் 121 ஜி பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த பிஜூ நேற்று மாலை மது அருந்த டாஸ்மாக் சென்றுள்ளார்.‌ அங்கு இருந்த இரண்டு நபர்களுக்கும் பிஜுவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் மது போதையில் இருந்த அந்த தெரியாத இருவரும், பிஜூவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் நடத்துநர் பிஜூ ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி