டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெறலாம்!

81பார்த்தது
டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெறலாம்!
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 13, 17 ஆகிய தேதிகளில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்துக் கழகம் உரிய அனுமதி வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி